அதிகாலையில் எழுந்து கரைதல், உணவை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணுதல், பிறர் காணாத வகையில் ஜோடி சேருதல், மாலையிலும் குளித்தல், ஏதாவது ஒரு காக்கை இறந்து விட்டால் அனைத்து காகங்களும் ஒன்று கூடி கரைதல் என்பது காக்கை இனத்தில் பொதுவான குணங்கள். இவற்றுள் ஒரு காக்கை இறந்தால் அனைத்து காகங்களும் கூடி நின்று கரைதல் என்பது, அஞ்சலி செலுத்துவதற்கு சமமாகவே கருதப்படுகிறது.
உங்களின் உள்ளுணர்வால் ஏற்படுவதா? அல்லது உண்மையிலேயே பித்ருக்களின் ஆசியா? என்பது அதிசயம் தான். ஆனால் தினமும் காலையில் காகத்திற்கு சாதம் வைத்து வந்தால், வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள், வீண் பழி போன்றவை உங்களை நெருங்கவே செய்யாது. செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது. தீராத கடன் தொல்லைகள், தள்ளிப்போகும் புத்திர பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும், உங்கள் நியாயமான கோரிக்கைகள